புதன், 18 ஏப்ரல், 2012

கிறிஸ்தவனா ? அல்லாதவனா?

நாஸிகளுக்கு எதிராக சர்ச்சில்-ரூஸ்வெல்ட்-ஸ்டாலின் மூவரும் யுத்தத்தை நடத்தினர்.முதல் இருவரும் கிறிஸ்தவர்கள்.சர்ச்சில் இந்த யுத்த நிகழ்ச்சிகளைக் குறித்து ஆறு புத்தகங்களைஎழுதினார்.கிறிஸ்தவ விசுவாசிகளான இருவரும் ஒருமுறை கூட தங்கள் உரையாடல்களில் "கடவுள்" என்ற வார்த்தையை உதட்டால் உச்சரிக்கவில்லை.
ஸ்டாலின் (ரஷ்ய சர்வாதிகாரி-Joseph Stalin-December 18 1878– March 5, 1953), மட்டும் "கடவுள் நமக்கு வட ஆப்ரிக்கா முற்றுகையில் வெற்றிதரட்டும்"-"நடந்தவைகளெல்லாம் கடவுளுக்கு சொந்தம்" முதலிய பல வார்த்தைகளைச் சொன்னதாக கூறப்பட்டுள்ளது.

(தகவல் உதவி இரட்சிப்பின் வழி blogger)

புதன், 28 மார்ச், 2012

புரிந்து கொள்ளுங்கள்

நான் என் நண்பர் ஒருவரை காண சென்று இருந்த போது நடந்த சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிரேன்...
நான் அவர்கள் வீடு சென்றபோது அன்புடன் வரவேற்று உபசரித்தார்கள்... பிறகு என் நண்பருடன் நான் உறையாடிக் கொண்டிருக்க அவரின் மனைவி தொலைக்காட்சியில் லைத்து இருந்தார்கள் வீட்டில் இருந்த நண்பரின் மாமனாரும் தொலைகாட்சியை ரசித்து கொண்டிருந்தார்..... நண்பருக்கு ஓரே ஒரு 3 வயது மகள் இருந்தாள்.. நண்பர் ஏதோ ஓன்றுக்காக எழுந்து சென்றார் அப்போது நான் என்னை சுற்றி நடப்பதை ஒரு விசை கவனிக்க துவங்கினேன்...
அந்த சிறு குழந்தையின் பக்கமாக என் கவனம் சென்றது அவள் சில விழையாட்டு பொருட்களை வைத்து விழையாடிக்கோண்டிருந்தாள் சில வகையான எழுத்து உருவங்கள் இருந்தது அதை பொருத்தமாக அடுக்க வேண்டும் ... அந்த எழுத்து உருவங்களுக்குள் துளை இருந்தது அத்துளையை அவ்வெழுத்தை எழுதுவதற்கன பயிற்சியை கொடுப்பதற்காக அமைத்து இருந்தது அப்பிள்ளை அதை புரிந்து இருந்தாலோ இல்லையோ ஆனால் அந்த துளையிருந்த இடத்தை நிறப்ப வேண்டும் என உயர்ந்தவளாக தன்னுடைய சட்டை பையில் தான் வைத்து இருந்த பலுன் மற்றும் இனிப்பு பொருட்களை வைத்து அத்துளைகளை நிறப்ப முயன்று கொன்டு இருந்தாள். அதை நிறப்பிய மகிழ்ச்சியில அருகில் இருந்த தன் தாயிடம் அதை காண்பிக்க முயன்றால் ஆனால் நண்பரின் மனைவியோ அக்குழந்தையை சட்டை செய்யவில்லை... அவரி கவனம் முழுதும் தொழைக்காட்சியிலே இருந்தது.. அக்குழந்தை ஏமாற்றத்துடன் தன் விழையாட்டை தொடர்ந்தது. இதை கவனித்த என் மனதில் அப்பிள்ளையின் மன எண்ணங்களை சிந்தித்து பார்த்தேன்.. அவ்விடத்தில் என்ன என்ன விழைவுகள் நிகழ்கின்றன என பார்த்தால்

1,அப்பிள்ளையின் ஆக்கத்திறன் அவமதிக்கப்படுகிறது.
2,எல்லாவற்றையும் பெற்றாறோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கின்ற பிள்ளையின எண்ணம் தோற்க்கடிக்கப்படுகின்றது.
3,பெற்றாருக்கும் பிள்ளைக்கும் இடையே இடைவேளி வளர்கின்றது.

தயிக்கு பிள்ளையோடு நேரத்தை செலவழிக்க முடியது தொலைக்காட்சியோடு நேரம் வீன் விரயம்....
இவைகளை தவிர்த்து பிள்ளைகளின் உலகை புறிந்து கொள்வார்களா இப்பெற்றோர்....... திடிர் என்னை யாரோ உலுக்கியது போல உணர்ந்தேன் பார்த்தாள் நண்பர் கைகள் என் தோள்களில் சிந்தனை களைந்து மறுபடியும் தொடர்ந்தோம் எம் உறையாடலை ஆனல் என் உள்மனம் மட்டும் குழந்தையின் உலகின் மீது இருந்தது ..........